தூத்துக்குடி மக்களின் தாகம் தீர்த்தவரும், தூத்துக்குடியின் தந்தை எனப் போற்றப்படும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தின் 153-ஆவது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்த் சிலைக்கு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆகியோர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதை தொடர்ந்து, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ’தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடித்த போது அத்துமீறி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர், மத்திய வெளியுறவுத் துறைக்கு தகவல் தெரிவித்து, படகுகளையும், மீனவர்களையும் மீட்பதற்கான உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும், தற்போது அங்கு பிடிப்பட்டுள்ள படகுகளை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்’ என தெரிவித்தார்.
இதையும் படிங்க: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க CM கடிதம்