தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கமல்ஹாசன் நேற்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,
"நான் அரசியல் களத்தில் நுழைந்ததற்கும், நீங்கள் பிற அரசியல்வாதிகளை இப்பகுதிக்குள் நுழைய விடாமல் தடுத்தற்கும் ஒரே காரணம்தான். நீங்களும் நாங்களும் ஒரே கோபத்தில் இருக்கிறோம் என்ற அடையாளம் இதுதான். இந்தியா போராடி சுதந்திரம் பெற்றிருக்க முடியும். ஆனால் சட்டரீதியாக செய்ததால் வெள்ளையர்கள் வணங்கி தலைகுணிந்து நாட்டைவிட்டு வெளியேறினார்கள். அதேபோன்று ஆட்சியில் உள்ள கொள்ளையர்களும் விரைவில் வெளியேறுவார்கள். மக்கள் தாங்கள்தான் தலைவர்கள் என்பதை மறந்ததால்தான் குடிநீரை விலைகொடுத்து வாங்கும் கொடுமை இருந்து வருகிறது. சினிமாவில் வாய்ப்பு கேட்டது கிடையாது. ஆனால் அரசியல் வாய்ப்புக்காக காத்திருக்க நேரமில்லை. ஆகவே மக்களாகிய நீங்கள் எனக்கு வாய்ப்பு கொடுங்கள்" என்று கோரிக்கை விடுத்தார்.