ETV Bharat / state

வேலையும் இல்ல... பட்டினியால் வாடுறோம்: சொந்த ஊருக்கு புறப்பட்ட வடமாநிலத்தவர்கள் - இருசக்கர வாகனத்தில் ராஜஸ்தான் புறப்பட்ட 36 பேர்

தூத்துக்குடி: கன்னியாகுமரியில் இருந்து ராஜஸ்தானுக்கு இருசக்கர வாகனத்தில் வட மாநிலத்தவர்கள் 36 பேர் செல்ல முயன்றனர்.

north indian
north indian
author img

By

Published : Apr 14, 2020, 1:21 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம், நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் ராஜஸ்தான் மாநிலம் வில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் குல்பி ஐஸ் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். குமரி பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் கோடை காலத்தில் குல்பி ஐஸ் விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில், கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் இவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.

உணவு உள்ளிட்ட உதவிகள் ஏதும் கிடைக்காமல் தவித்து வந்தனர். தற்போது, மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலம் செல்ல முடிவெடுத்து முதற்கட்டமாக 36 பேர் குழந்தைகளுடன் தங்களது இருசக்கர வாகனத்தில் அதிகாலையில் புறப்பட்டனர். கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டவர்கள், தூத்துக்குடி எல்லைச் சோதனை சாவடியான பருத்திகுளம் அருகே வந்த போது கயத்தார் காவல் துறையினர் அவர்களை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், தாங்கள் கன்னியாகுமரி பகுதியில் குல்பி ஐஸ் வியாபாரம் செய்து வருவதாகவும், ஊரடங்கினால், தங்களது வாழ்வாதாரம் இழந்து மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதால், சொந்த ஊருக்கு செல்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கயத்தாறு காவல் ஆய்வாளர் முத்து, வட மாநிலத்தவர்களுக்கு காலை உணவு, முகக்கவசம் ஆகியவற்றை வழங்கி காவல் உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நெல்லை மண்டல டி.ஐ.ஜி உத்தரவின் பேரில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அவர்கள் தங்கியிருந்த பகுதிக்கு வேன் மூலம் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி காவல் துறையின் பாதுகாப்போடு அனுப்பிவைக்கப்பட்டனர்.

கன்னியாகுமரியிலிருந்து 21 ஆண்கள், 6 பெண்கள், 9 குழந்தைகள் என 13 இருசக்கர வாகனங்களில் நெல்லை மற்றும் கன்னியாகுமரி சோதனைச் சாவடிகளை கடந்து வந்தது எப்படி, இவர்கள் கடந்து வந்த சோதனை சாவடிகளில் அலட்சியமாக பணியிலிருந்த காவலர்கள் யார் என டி.ஐ.ஜி உத்தரவின் பேரில் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: பெண்களின் பணம் திரும்பப் பெறப்படுமா? வதந்தி பரவிய நிலையில் நிதித்துறை விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.