சாத்தான்குளம் கொலை வழக்கு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தும் நிலையில் கோவில்பட்டி கிளை சிறையில் கோவில்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதித்துறை நடுவர் பாரதிதாசன் 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினார்.
![judge bharathidasan investigation on sathankulam incident](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tut-03-magistrate-barathidhasan-2day-enquiry-vis-script-7204870_11072020203900_1107f_1594480140_303.jpg)
இந்நிலையில், விசாரணையை முடித்துக்கொண்டு பிற்பகல் 2 மணியளவில் பாரதிதாசன் வெளியே வந்தார்.
காலை 10:40 மணியளவில் சிறைச்சாலைக்குள் சென்று விசாரணையை தொடங்கிய நீதித்துறை நடுவர் பாரதிதாசன் சிறைக் கைதிகள், சிறை அலுவலர்களிடம் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக விசாரணையை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க... சாத்தான்குளம் கொலை வழக்கு: குடும்பத்தினரிடமிருந்து விசாரணையைத் தொடங்கியது சிபிஐ!