தூத்துக்குடி: முக்காணி பகுதியைச் சேர்ந்தவர் மாசானமுத்து (55). இவர் அந்தப் பகுதியில் உள்ள சுடலைமாட சுவாமி கோயிலில் பூசாரியாக இருந்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நிலை சரியில்லை என சுடலைமாட சுவாமி கோயிலுக்கு வேண்டிக்கொள்ள சென்றுள்ளார்.
தொடர்ந்து அப்பெண் கோயிலுக்கு அடிக்கடி சென்று வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது கன்னித்தன்மை நீங்காத பெண்ணை ராமேஸ்வரம் கடற்கரைக்கு அழைத்துச் சென்று சில பரிகாரங்கள் செய்தால் உடல்நிலை சரியாகும் என அக்கோயில் பூசாரி மாசானமுத்து கூறியிருக்கிறார்.
சிறுமியை பாலியல் வண்புணர்வு செய்த கொடுமை
இதனையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு, அந்த பெண் தனது 15 வயது மகளை ராமேஸ்வரத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில், தனியார் விடுதி ஒன்றில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுமியை, மாசானமுத்து இரவில் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
அப்போது விடுதியிலிருந்து தப்பிய சிறுமி, ராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
பூசாரிக்கு சாகும்வரை சிறை தண்டனை
இந்நிலையில், இதுகுறித்த வழக்கு இன்று (ஜூலை.15) ராமநாதபுரம் மகிளா நீதிமன்ற நீதிபதி சுபத்ரா முன்னிலையில் விசாராணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பூசாரி மாசானமுத்துவுக்கு சாகும்வரை சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சிறையில் இருந்து ஜாமினீல் வெளியே வந்தவருக்கு கத்திக் குத்து!