ETV Bharat / state

பள்ளி மைதானத்தில் கிறிஸ்தவ தேவாலயம்- இந்து முன்னணி கண்டனம் - hindu munnani

மீளவிட்டான் கிராமத்தில், சட்டவிரோதமாக அரசு நிலத்தில் தேவாலயம் அமைக்க முயற்சிக்கும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணியினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

hindu-munnani-agitation-for-church-construction
பள்ளி மைதானத்தில் கிறிஸ்துவ தேவாலயம்- இந்து முன்னணி கண்டனம்
author img

By

Published : Jul 20, 2021, 10:55 AM IST

தூத்துக்குடி: மீளவிட்டான் கிராமத்தில், சட்டவிரோதமாக அரசு நிலத்தில் தேவாலயம் அமைக்க முயற்சிக்கும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்து முன்னணியினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

அவர் அளித்த மனுவில், தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடம் பயன்படுத்திவரும் அரசு நிலத்தில் சட்டத்திற்கு புறம்பாக தேவாலயம் அமைக்க 2015 முதல் 2020 டிசம்பர் வரை முயற்சி நடைபெற்றதாகவும், பின்னர் தூத்துக்குடி தாசில்தார் முன்னிலையில் சமாதான கூட்டம் நடைபெற்ற பின்பு அந்த முயற்சியை அப்பள்ளி கைவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போது தாசில்தாரின் உதவியோடு அந்த முயற்சியில் பள்ளி நிர்வாகம் ஈடுபட்டுவருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

hindu_munnani_agitation for church construction
ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினர்

மைதானத்தில் தேவாலாய கட்டடப்பணி நடைபெற்றுவருவதை கண்டித்து இந்து முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், தூத்துக்குடி தாசில்தார், பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதையும் படிங்க: 'சீனா, பாகிஸ்தான், கிறிஸ்தவ நாடுகளின் சதியால் தமிழ்நாட்டில் கலவரம்!'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.