ETV Bharat / state

காவல் துறையில் இருக்கும் குறைகள் சரி செய்யப்படும் - தென் மண்டல ஐஜி முருகன்! - The death of the lockup

தூத்துக்குடி: தென் மண்டல காவல் துறையின் தலைவராக முருகன் பொறுப்பேற்றதோடு, காவல் துறையில் இருக்கும் குறைகள் விரைவில் சரிசெய்யப்படும் என்றார்.

தென் மண்டல காவல் துறை தலைவர் முருகன்
தென் மண்டல காவல் துறை தலைவர் முருகன்
author img

By

Published : Jul 2, 2020, 3:59 PM IST

தூத்துக்குடி, தென் மண்டல காவல் துறையின் தலைவராக முருகன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்றார். அவரை டிஐஜி பிரவீன்குமார் அபிநபு, காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் வரவேற்றனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “ சாத்தான்குளம் வழக்கில் சிபிசிஐடி காவல் துறை தீவிரமாக விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுத்துள்ளனர். அதற்கு உங்கள் அனைவரின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் லாக்கப் மரணம் என்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. எனவே காவலர்களுக்கு போதுமான அளவு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பயிற்சி ஒன்றே மனிதர்களை மிகச்சிறந்தவர்களாக்கும் வழிகளாகும்.

அதுபோல பிரெண்ட்ஸ் ஆப் காவல்துறை அமைப்புக்கு எந்த அதிகாரமும் கிடையாது. ஒருவேளை சாத்தான்குளம் வழக்கில் அவர்கள் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். தென் மண்டலத்தில காவல் துறையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் குறைகள் விரைவில் சரி செய்யப்படும்.

சாத்தான்குளம் வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் மூலம் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே நிச்சயமாக காவல் துறை மக்களுக்கு நண்பனாகவே செயல்படும்” என்றார்.

இதையும் படிங்க: 'காவல் துறை மக்கள் விரும்பும் துறையாக செயல்படும்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.