ETV Bharat / state

"அண்ணாமலையைப் பார்த்து நாங்கள்தான் சிரிக்க வேண்டும்" - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ - today latest news

Kadambur Raju said that Annamalai is not maturity: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பக்குவம் இல்லை எனவும், அவரைப் பார்த்து நாங்கள்தான் சிரிக்க வேண்டும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Kadambur Raju said that Annamalai is not maturity
அண்ணாமலையை பார்த்து நாங்கள் தான் சிரிக்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2023, 8:24 AM IST

அண்ணாமலையை பார்த்து நாங்கள் தான் சிரிக்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி: கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து தேர்தல் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டமானது, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் .

அப்போது எடப்பாடி பழனிசாமி பிரதமராக வர வாய்ப்பு உள்ளது என்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்துக்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அளித்த பதில் தொடர்பாக கேட்ட கேள்விக்கு, "பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பக்குவம் இல்லை. தங்களது தலைவரை உயர்த்திப் பேச வேண்டும் என்பதற்காக, அந்த கருத்தினை கூறி இருக்கலாம்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான் பிரதமர் வேட்பாளர் என்று கூறி தனித்து நின்றோம். 37 இடங்களில் வெற்றி பெற்றோம். 1990-இல் சந்திரசேகர் மற்றும் 1998-இல் வாஜ்பாய் ஆகியோர் பிரதமராக வர அதிமுக கொடுத்த ஆதரவுதான் காரணம்.

இதற்கு அண்ணாமலைக்கு சிரிப்பு வரவில்லையா? அன்றைக்கு அவர் இல்லை. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து அவருடைய கருத்து என்று கூறி சென்று இருக்கலாம். இதில் சிரிப்பதற்கு ஒன்றுமில்லை. அண்ணாமலையைப் பார்த்து நாங்கள்தான் சிரிக்க வேண்டும்" என்று பதிலளித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், "திமுக ஆட்சிக்கு வந்ததும், முதல் கையெழுத்தில் நீட் தேர்வை ஒழிப்போம் என்று தேர்தலின்போது கூறியது. ஆனால், ஆட்சிக்கு வந்து மூன்றாம் ஆண்டு நெருங்கும் நிலையில், நீட் தேர்வினை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்துகின்றனர். இது எவ்வளவு பெரிய ஏமாற்று நாடகம்? மக்களை ஏமாளிகளாக நினைத்து ஏமாற்றுகின்றனர்.

நீட் தேர்வு வேண்டாம் என்று அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்தில் மசோதா கொண்டு வரப்பட்டது. அதே வேலையைத்தான் இன்று திமுக செய்கிறது. காலத்திற்கு ஏற்றார்போல் வேஷத்தை மாற்றுகின்ற இயக்கம், திமுக. நீட் தேர்வு விவகாரம் ஒன்றே திமுகவின் நிலைப்பாட்டை மக்களுக்கும், வெளி உலகிற்கும் பறைசாற்றுகிறது" என்று தெரிவித்தார்

இதனை அடுத்து, 2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், "சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது அவர்களின் உரிமை. யாரும், யாருடனும் கூட்டணி சேரலாம். நாங்கள் மக்களை நம்புகிறோம். அதிமுக தலைமையில் மிகப்பெரிய மெகா கூட்டணி அமையும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

சில கட்சிகளுடன் பேசி இருக்கலாம், கூட்டணி முடிவாகி இருக்கலாம், ஆனால் அதை தற்போது சொல்ல முடியாது. அதிமுக தலைமையில் அமையக் கூடிய மெகா கூட்டணிதான், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை" என்று கூறினார்.

இதையும் படிங்க: "எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளரா?.. சிரிப்பு தான் வருகிறது" - அண்ணாமலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.