தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் கந்தன். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர், ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் பிணவறை பிரிவில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் குடும்ப பிரச்னை தொடர்பாக கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளார். அப்போது காவல் நிலையத்தில் இருந்த உதவி ஆய்வாளர் மகேஸ்வரி மற்றும் இதர காவலர்கள், புகார் அளிக்கச் சென்ற கந்தனை உள்ளே அனுமதிக்காமல் வாசலிலேயே நிற்க வைத்துளனர்.
மேலும் கந்தனை மிகவும் இழிவாக பேசியது மட்டுமின்றி, "நீதிமன்றம் சென்றால்கூட உன்னால் ஒன்றும் செய்ய முடியாது" என்று காவலர்கள் பேசியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: பள்ளி மாணவனை சாதி பெயர் சொல்லி அடித்த பெண்கள் - அரசின் நடவடிக்கை என்ன?