தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்துவருகிறார். அவருக்கு மகள் ஒருவர் உள்ளார்.
கூலித்தொழிலாளி தினமும் குடிபோதையில், தன்னுடைய சொந்த மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது.
இது குறித்து யாரிடமும் வெளியே சொன்னால் சிறுமியை கொன்றுவிடுவதாகவும் அவர் மிரட்டியுள்ளார். இந்நிலையில் வீட்டில் ஆள் இல்லாத சமயத்தில் குடிபோதையில் இருந்த கூலித்தொழிலாளி, சொந்த மகள் என்றும் பாராமல் மீண்டும் சிறுமியை வற்புறுத்தி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். மேலும் இது குறித்து வெளியே சொல்லக் கூடாது என்று மீண்டும் சிறுமியை மிரட்டியுள்ளார்.
இந்நிலையில் மகள் சோகமாக இருப்பதைக் கண்ட தாய் சிறுமியிடம் என்ன நடந்தது என விசாரித்துள்ளார். அப்பொழுது அச்சிறுமி தந்தை தனக்கு இழைத்த கொடுமைகளை கண்ணீர்-வடித்துக்கொண்டே கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் இது குறித்து தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கூலித்தொழிலாளியை கைதுசெய்து நீதிபதியின் முன்பு முன்னிலைப்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து நீதிபதியின் உத்தரவின்பேரில் அவர் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார். தந்தையே தனது மகளுருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:பட்டப்பகலில் பிரபல ரவுடி கொடூரமாக வெட்டிக்கொலை!