தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பிள்ளையார் நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி (58), மகாலட்சுமி தம்பதி. இவர்களுக்கு அபிராமி என்ற மகள் உள்ளார்.
இவர் பிள்ளையார்நத்தம் கிராமத்தில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் உளுந்து, மக்காச்சோளம் பயிர் செய்திருந்தார். இந்நிலையில் உளுந்து பயிரில் மாவுப்பூச்சி தாக்குதலும், மக்காச்சோளப் பயிரில் படைப் புழுத் தாக்குதலும் நிகழ்ந்தன.
இதற்குப் பயிர் காப்பீட்டுத் தொகையாக வெறும் 500 ரூபாய் மட்டுமே வங்கிக் கணக்கில் வரவாகி இருந்தது. இதனால் நாராயணசாமி கடந்த இரண்டு நாள்களாக மனமுடைந்த நிலையில் இருந்தார்.
இன்று (ஜன. 02) காலை அவர் தனது வேளாண் நிலத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மேலும் 'என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்' என குடும்பத்தினருக்கு நாராயணசாமி கடிதம் எழுதியிருக்கிறார்.
இது குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பசி கொடுமை: கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை!