தூத்துக்குடி: தூத்துக்குடியில் 7 போக்குவரத்துப் பிரிவு பணிமனைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு செயல்படும் அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகிகளுக்கான தேர்தல், வரும் ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனுத் தாக்கல் தூத்துக்குடி அதிமுக மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் இன்று (ஆக.9) தொடங்கியது.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியை நிலைநிறுத்துவோம்.
தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்துள்ள திமுக 100 நாட்களைக் கடந்தும், தேர்தல் வாக்குறுதிகளான நீட் தேர்வு ரத்து, பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைப்பு உள்ளிட்டவைகளை நிறைவேற்றவில்லை” என்றார்.
இதையும் படிங்க: அதிமுக அரசால் ரூ. 2,577 கோடி இழப்பு - நிதியமைச்சர்