ETV Bharat / state

பேருந்து நிறுத்தத்தில் தஞ்சம்.. 3 நாட்களுக்கு பிறகு கிடைத்த SMS.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீட்பின் திக் திக் பின்னணி..! - ஏரல் வெள்ள பாதிப்பு

Minister Anitha Radhakrishnan: தூத்துக்குடி வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 3 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீட்கப்பட்டது குறித்து அமைச்சரின் உதவியாளர் கிருபா ஈடிவி பாரத்திற்கு பிரேத்யேக தகவல்களை அளித்துள்ளார்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 20, 2023, 8:57 PM IST

தூத்துக்குடி: தென் மாவட்டங்களில், குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை மற்றும் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாகத் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியே மழை வெள்ளத்தில் மூழ்கியது போல் காட்சியளிக்கிறது.

இந்நிலையில், ஆத்தூர் வழியாகத் தனது சொந்த ஊரான தண்டு பத்து பகுதிக்குச் செல்வதற்காகக் கடந்த திங்கட்கிழமை(டிச.18) காரில் சென்ற தமிழ்நாடு கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகச் செல்ல முடியாத நிலையில் ஏரல் பகுதி வழியாகச் செல்லலாம் என முயன்றுள்ளார். அவருடன் வாகன ஓட்டுநர், கன்மேன் உட்பட ஐந்துக்கும் மேற்பட்டோர் உடன் இருந்துள்ளனர். அப்போது அங்கே ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய அவர்கள் வெள்ளத்திலிருந்து மீள முடியாமல் தவித்துள்ளனர்.

தொடர்ந்து தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டதால், அங்கிருந்து வெளியே செல்ல முடியாமல் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது உறவினர்களுக்கு எஸ்எம்எஸ் வாயிலாக தெரியப்படுத்தியுள்ளார். மூன்று நாட்களுக்குப் பிறகு உறவினர் மூலம் எஸ்எம்எஸ் கிடைக்கப்பட்டு வெள்ளத்திலிருந்து மீட்டு வெளியே அழைத்து வரப்பட்டார். அவரை தமிழ்நாடு தீயணைப்புத் துறை இயக்குநர் ஆபாஷ் குமார் உத்தரவின் பெயரில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் மற்றும் பாளையங்கோட்டை தீயணைப்புத் துறை மற்றும் மீட்பு படையினர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை மீட்டுக் கொண்டு வந்துள்ளனர்.

இதுகுறித்து, அமைச்சரின் உதவியாளர் கிருபா ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரேத்யேக தகவல், "கடந்த 18ஆம் தேதி மழை வெள்ள அறிவிப்பு அளித்த உடன் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் உள்ள உமரிகாட்டில் உள்ள கட்சி நிர்வாகியைச் சந்தித்து விட்டு அதன் பின் அங்குள்ள மக்களைச் சந்தித்து விட்டு சொந்த ஊரான திருச்செந்தூர், தண்டு பத்து பகுதிக்குச் செல்லும் போது அங்குப் பாலம் உடைந்து உள்ளது. பின்னர் மறு வழியாகச் செல்லலாம் என நினைத்து வேறு வழியாகச் செல்லும் போது அருகே உள்ள கிராமத்தில் மாட்டிக் கொண்டார்.

பின்னர், அந்த கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் அமைச்சர் தங்கியுள்ளார். அமைச்சருக்கு உணவு அந்த கிராம மக்கள் சமைத்துக் கொடுத்துள்ளனர். பின்னர், அமைச்சரைத் தொடர்பு கொள்ளாமல் இருந்த நிலையில், ஆட்சியர் உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டு உடனடியாக மீட்க உத்தரவிட்டுள்ளார். ஆனால் 18ஆம் தேதியே அமைச்சர் தனது உறவினர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பிய நிலையில், இன்று காலை அந்த எஸ்எம்எஸ் கிடைத்தவுடன் உடனடியாக மீட்கப்பட்டார்" இவ்வாறு கூறினார்.

இதையும் படிங்க: நெல்லை மழை வெள்ள பாதிப்பில் இதுவரை 12 பேர் உயிரிழப்பு; 215 வீடுகள் முற்றிலும் சேதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.