ETV Bharat / state

தேர்தல் பறக்கும் படை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் - சந்தீப் நந்தூரி

தூத்துக்குடி: தேர்தல் பறக்கும் படை குழுக்கள் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.

Nanduri
author img

By

Published : Mar 26, 2019, 12:19 PM IST

மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று 100 விழுக்காடு வாக்களிப்பதை வலியுறுத்தும் விதமாக தூத்துக்குடியில் பல்வேறு கட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி பசுமைப் பண்ணை நுகர்வோர் கூட்டுறவு சங்கத்தில் இருந்து விற்பனையாகும் பொருள்களின் மீது தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு குறித்து கூட்டுறவு நுகர்வோருக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நேற்றைய தினம்வரை மக்களவைத் தேர்தலுக்காக 26 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். மாவட்டத்தில் தேர்தல் பார்வை கண்காணிப்பாளர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தங்களது பணிகளை தொடர்ந்து செய்துவருகின்றனர். தேர்தல் பறக்கும் படை குழுக்கள் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் தூத்துக்குடி மாவட்ட தேர்தல் பார்வை கண்காணிப்பாளரான சீமா ஜெயின் தூத்துக்குடிக்கு வருகை தந்து தேர்தல் பணிகளை ஆய்வு செய்துவருகிறார். தூத்துக்குடி பசுமை பண்ணை நுகர்வோர் சங்கத்திலிருந்து 5 லட்சத்திற்கும் அதிகமான பொருட்கள் விற்பனையாவதால் அதன்மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் நடவடிக்கைகள் தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புதிய வாக்காளர்களாக வாக்காளர் பட்டியலில் சேர்வதற்காக படிவம் வழங்கியுள்ளனர்.

மாவட்டத்தில் 1619 வாக்குச்சாவடி ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேவையின் அடிப்படையில் இந்த வாக்குச்சாவடிகள் அதிகரிக்கலாம். தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று 100% வாக்களிப்பதை வலியுறுத்தும் விதமாக தூத்துக்குடியில் பல்வேறு கட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி பசுமைப் பண்ணை நுகர்வோர் கூட்டுறவு சங்கத்தில் இருந்து விற்பனையாகும் பொருள்களின் மீது தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஓட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குச்சாவடியில் ஓட்டு பதிவு குறித்து கூட்டுறவு நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதை அடுத்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், நேற்றைய தினம் வரை நாடாளுமன்ற தேர்தலுக்காக 26 பேர் வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளனர்.
மாவட்டத்தில் தேர்தல் பார்வை கண்காணிப்பாளர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தங்களது பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பை அடைந்ததையொட்டி தற்போதைய தேர்தல் பறக்கும் படை குழுக்கள் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் தூத்துக்குடி மாவட்ட தேர்தல் பார்வை கண்காணிப்பாளரான சீமா ஜெயின் தூத்துக்குடிக்கு வருகை தந்து தேர்தல் பணிகளை ஆய்வு செய்து வருகிறார். தூத்துக்குடி பசுமைப் பண்ணை நுகர்வோர் சங்கத்திலிருந்து 5 லட்சத்திற்கும் அதிகமான பொருட்கள் விற்பனையாவதால் அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் நடவடிக்கைகள் தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புதிய வாக்காளர்களாக வாக்காளர் பட்டியலில் சேர்வதற்காக படிவம் வழங்கியுள்ளனர். மாவட்டத்தில் 1619 வாக்குச்சாவடி ஏற்படுத்தப்பட்டுள்ளது தேவையின் அடிப்படையில் இந்த வாக்குச்சாவடிகள் அதிகரிக்கலாம். ஒரு வாக்குச் சாவடி உட்பட்ட பகுதியில்1, 400 க்கும் மேற்பட்டவர்கள் இருந்தால் கூடுதலாக வாக்குச்சாவடி ஏற்படுத்த வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் அறிவுரை. எனவே வேட்பாளர் மனு தாக்கல் முடிவுக்குபின் வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு கூடுதல் வாக்குச்சாவடி மையங்கள் தேவை எனில் அமைக்கப்படும். தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
எனக்கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.