ETV Bharat / state

அரசுடன் இணையத் தயார் - கனிமொழி

தூத்துக்குடி: தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தரமாகத் தீர்வு காண்பதற்கு அரசுடன் இணைந்து பணியாற்றத் தயார் என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

கனிமொழி
author img

By

Published : Jun 23, 2019, 6:23 PM IST

தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை கண்டித்தும், அதற்கு தீர்வு காண வலியுறுத்தியும் தூத்துக்குடி திமுக எம்.பி கனிமொழி தலைமையில் விளாத்திகுளத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்
காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்

அப்போது பேசிய கனிமொழி, தமிழ்நாட்டு மக்கள் காலிக் குடங்களுடன் தண்ணீருக்காக அலையும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும், திமுக ஆட்சி காலத்தில் கருணாநிதி கொண்டு வந்த நீர் மேலாண்மை திட்டங்களை முறையாக செயல்படுத்தியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது எனவும் கூறினார்.

அதேபோல், இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக தமிழ்நாடு அரசுடன் இணைந்து பணியாற்றத் தயார் என்றும், குடிநீர் கிடைக்காத கிராமங்களுக்கு திமுக சார்பில் லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.

மக்களுக்கு குடிநீர் வழங்கிய கனிமொழி எம்.பி
மக்களுக்கு குடிநீர் வழங்கிய கனிமொழி எம்.பி

மேலும், ஆட்சி மாற்றம் விரைவில் ஏற்பட்டு, மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக வந்த பிறகு தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

Intro:பிளாஸ்டிக் குடங்கள் தான் தமிழகத்தின் இன்றைய அடையாள குறியீடு - - கனிமொழி எம்பி
Body:
தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்தும், தீர்வு காண வலியுறுத்தி விளாத்திகுளத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிராகவும், தண்ணீர் தட்டுப்பாட்டை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். திமுக மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கீதாஜீவன் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்

இதனை தொடர்ந்து கனிமொழி எம்பி பேசுகையில் தமிழகத்தில் காலிகுடங்களுடன் மக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. நாங்கள் தான் அரசியல் ஆக்குகிறோம் என்று அதிமுக சொல்கிறது, இது தேர்தலுக்கான அரசியல் இல்லை என்றும், பிளாஸ்டிக் குடங்களை வைத்துக்கொண்டு மக்கள் தண்ணீருக்கு அலையும் நிலை தான் உள்ளது. தமிழகத்தின் அடையாளமாக பிளாஸ்டிக் குடங்கள் தான் குறியீடாக இருக்கிறது என்றும், தண்ணீர் பிரச்சினையில் தமிழக அரசுடன் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம்,ஆனால் அரசு தண்ணீர் பிரச்சினையை. மறைக்க நினைக்கிறது, மத்திய அரசுக்கு பயந்து கேரளாவில் இருந்து தண்ணீர் பெற தமிழக அரசு மறுத்து விட்டது என்றும், இதே மெத்தனப் போக்கை கடைபிடிக்கும் என்றால் இந்த அரசை எதிர்த்து ஒரு மிகப்பெரிய போராட்டத்தை திராவிட முன்னேற்ற கழகம் முன் எடுக்கும் என்றும்,மக்களின் உணர்வுகளை இந்த அரசுக்கு எடுத்துரைப்போம், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி கொண்டுவந்த திட்டங்களை இந்த பராமரிக்கவும் இல்லை, செயல்படுத்தவும் இல்லை, ஆட்சி மாற்றம் விரைவில் ஏற்படும்.. மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும்.. குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும்.. நிரந்தரமாக குடிநீர் பிரச்சினையை தீர்க்க திட்டங்களை கொண்டு வருவார் என்றார்.

இதைதொடர்ந்து விளாத்திகுளம் அருகே உள்ள கத்தாளம்பட்டியில் பொது மக்கள் கோரிக்கையை ஏற்று திமுக சார்பில் லாரிகள் மூலமாக குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சினை இருக்கிறது. ஆனால் அரசு ஏற்றுக் கொள்ள மறுக்கிறது,அரசுவுடன் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம்,தண்ணீர் பிரச்சினை கண்கூடாக தெரிகிறது.. அரசு ஏற்றுக் கொள்ள மறுக்கிறது,திமுக ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்தவில்லை, குடிநீர் கிடைக்காத கிராமங்களுக்கு திமுக சார்பில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்து வருகிறோம்,எதிர் கட்சி தலைவர் கேரளா முதல்வருக்கு தண்ணீர் வழங்க கோரிக்கை வைத்தார். அவர்கள் கொடுப்பது குறைந்தளவு தண்ணீர் என்றாலும், தமிழக அரசு ஏற்க மறுத்து விட்டது, கூட்டணி குறித்து திமுக தலைவர் தெளிவான பதில் கூறுவார் என்றும்,யார், யாருக்கு பல்லாக்கு தூங்கி கொண்டு, தமிழகத்தினை கூறு போட்டு கொண்டு இருக்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும்.. அவர்கள் பல்லாக்கு தூக்கிய காரணத்தினால் இன்றைக்கு ஒரு இடங்கிளில் கூட வெற்றி பெறமுடியாத நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.