மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த ஏழை-எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள பள்ளியில் நடைபெற்றது.
இதில் திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்பியுமான கனிமொழி கலந்துகொண்டு பொதுமக்கள் 650 பேருக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் அடங்கிய நலத்தொகுப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திமுக மாநில செயற்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, நகர செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.