ETV Bharat / state

திருவைகுண்டம் தொகுதியை அதிமுகவிடமிருந்து கைப்பற்றியது காங்கிரஸ்! - news today

திருவைகுண்டம் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் வெற்றி பெற்றுள்ளார்.

congress party win
காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி
author img

By

Published : May 3, 2021, 10:22 AM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டப்பேரவை தொகுதியில் திருவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சண்முகநாதனை விட 17 ஆயிரத்து 372 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

திருவைகுண்டம் சட்டப்பேரவை தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 24 ஆயிரத்து 384 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 386 வாக்குகள் தேர்தலில் பதிவாகி இருந்தன.

இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜூக்கு 76 ஆயிரத்து 843 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சண்முகநாதனுக்கு 59 ஆயிரத்து 471 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுப்பையா பாண்டியனுக்கு 12 ஆயிரத்து 706 வாக்குகளும், அமமுக கட்சி சார்பில் போட்டியிட்ட ரமேஷுக்கு 10 ஆயிரத்து 203 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட சந்திரசேகர் 1355 வாக்குகளும் பெற்றனர். மொத்தம் பதிவான வாக்குகளில் 123 வாக்குகள் நிராகரிக்கப்பட்டது.

கடந்த தோர்தலில் அதிமுக வசமிருந்த திருவைகுண்டம் தொகுதியை இம்முறை காங்கிரஸ் கைப்பற்றி வெற்றியை பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.