ETV Bharat / state

தூத்துக்குடியில் பத்திரப்பதிவு மேலாளர் வீட்டில் சோதனை - குற்றச் செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட பத்திரப்பதிவு மேலாளர் வீட்டில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சோதனை
சோதனை
author img

By

Published : Jul 29, 2021, 8:00 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பத்திரப்பதிவு அலுவலக மேலாளராகப் பணியாற்றிவருபவர் குருசாமி. இவர் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகவும், பத்திரப்பதிவுகளுக்கு கையூட்டுப் பெறுவதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறைக்குப் புகார்கள் வந்தபடி இருந்தன.

இதனையடுத்து தூத்துக்குடி கே.டி.சி. நகர் ஹவுசிங் போர்டு காலனியில் உள்ள குருசாமி வீட்டில், இன்று (ஜூலை 29) காலை லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

பத்திரப்பதிவு மேலாளர் குருசாமி
பத்திரப்பதிவு மேலாளர் குருசாமி

முக்கிய ஆவணங்கள் கைப்பற்றல்

இந்தச் சோதனை லஞ்ச ஒழிப்புத் துணை கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் தலைமையிலான குழுவினரால் நடத்தப்பட்டது.

சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர்

அப்போது பத்திரப்பதிவு மேலாளர் குருசாமி, அவரது குடும்பத்தினர் பெயரில் உள்ள வங்கிக் கணக்குகள், சொத்துப் பத்திரங்கள், பணப்பரிமாற்றங்கள் குறித்த முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இது குறித்து பத்திரப்பதிவு மேலாளர் குருசாமியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. லஞ்ச ஒழிப்புத் துறையினரின் திடீர் சோதனையால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: தொழிலதிபரை கடத்தி பிட் காயின்களை கொள்ளையடித்த 6 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.