தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அமமுக பொதுச்செயலாளர் தலைமை டிடிவி தினகரன் களம் காண்கிறார். இதையடுத்து இரு கட்சியினரும் பரப்புரையில் தீவிரம் காட்டிவருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக வேட்பாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ, கோவில்பட்டி அருகேயுள்ள அன்னை தெரேசா நகரில் நேற்று (மார்ச்.21) பரப்புரை மேற்கொள்ள சென்றிருக்கிறார். அவர் செல்லும் வழியில், டிடிவி தினகரனை ஆதரித்து வாக்கு சேகரிக்க அக்கட்சியின் தென் மண்டலப் பொறுப்பாளர் மாணிக்கராஜா மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் காத்திருந்துள்ளனர்.
இதனிடையே, டிடிவியின் ஆதரவாளர்கள் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் காரை மறித்து ஆயிரம் வாலா பட்டாசை ஆபத்தான முறையில் வெடிக்கச் செய்துள்ளனர். இந்நிலையில், அமைச்சரின் காருக்கு வெகுஅருகில் பட்டாசை வெடிக்கச் செய்தது கொலை முயற்சியாக இருக்குமோ என அப்பகுதியிலிருந்து அதிமுகவினர் சலசலத்தனர்.
இதையும் படிங்க:சாலை வசதி இல்லை.. வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் நூதனப் போராட்டம்!