ETV Bharat / state

செந்தில்நாதனுக்கே வெளிச்சம் - திருச்செந்தூரில் பிரபல சைவ ஹோட்டலில் ரசத்தில் பல்லி! - thoothukudi news

திருச்செந்தூரில் பிரபல சைவ ஹோட்டலில் ரசத்தில் பல்லி கிடந்ததாக வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்செந்தூரில் பிரபல சைவ ஹோட்டலில் ரசத்தில் பல்லி கிடந்ததாக குற்றச்சாட்டு

author img

By

Published : Jul 12, 2023, 1:36 PM IST

திருச்செந்தூரில் பிரபல சைவ ஹோட்டலில் ரசத்தில் பல்லி கிடந்ததாக குற்றச்சாட்டு

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் அருகில் தனியார் சைவ ஹோட்டல் உள்ளது. மிகவும் புகழ் பெற்ற இந்த ஹோட்டலில் நேற்று(ஜூலை 11) சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது மதுரையைச் சேர்ந்த ஒருவருடன் சென்னையைச் சேர்ந்த சோனியா உட்பட நான்கு பேர் ஒரே மேஜையில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சோனியா அருகில் இருந்தவரது சாப்பாட்டில் பரிமாறப்பட்ட ரசத்தில் பல்லி கிடந்துள்ளது. இதனையடுத்து அவர் உணவு பரிமாறியவரிடம் புகார் தெரிவித்துள்ளார். உடனே, ஹோட்டல் ஊழியர்கள் பல்லி கிடந்த உணவை உடனடியாக எடுத்துச்சென்றுள்ளனர்.

அப்போது உணவு சாப்பிட்ட சென்னையைச் சேர்ந்த சோனியா மற்றும் அவரது நண்பர்கள் ஹோட்டல் நிர்வாகத்திடம் இது பற்றி தெரிவித்துள்ளனர். ஆனால், ஹோட்டல் நிர்வாகமும் பல்லி கிடந்த ரசத்தை கீழே ஊற்றி விட்டதாக சாதாரணமாகப் பதிலளித்துள்ளனர்.

மேலும் இந்த விவகாரம் குறித்து பேசிய சோனியா, ''எங்கள் அருகில் உணவு அருந்திய பெரியவருக்கு பறிமாறப்பட்ட ரசத்தில் பல்லி இருந்தது. உடனே, ஓட்டல் ஊழியர் அந்த இலையை அகற்றினார். அதற்குப் பின் யாருக்கும் ரசம் பறிமாறவில்லை. ஆனால், அதற்கு முன் ரசம் சாப்பிட்டவரின் நிலை என்னவாகும். அந்த பெரியவரிடம் சாப்பாட்டிற்குரிய பணத்தை கொடுத்து அனுப்பி விட்டனர். இந்த விவகாரம் பற்றி ஓட்டல் நிர்வாகத்திடம் கேட்டால் உரிய பதில் இல்லை.

இதையும் படிங்க: சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 313வது பிறந்தநாள் விழா: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மரியாதை

திருச்செந்தூரில் உள்ள பிரபலமான இந்த ஓட்டலில் தரமான உணவு கிடைக்கும் என பொது மக்கள் நம்பி வருகின்றனர். ஆனால், ரசத்தில் பல்லி கிடந்தது குறித்து கேள்வி எழுப்பினால் அலட்சியமாகப் பதில் அளிக்கின்றனர். இந்த விவகாரத்தில் எங்களுக்கு முன் சாப்பிட்டவர்களுக்கு தரமான உணவு பறிமாறப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்’’ என்றார். மேலும் ஹோட்டல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சோனியா உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: தூத்துக்குடி - மீளவிட்டான் இரட்டை ரயில் பாதை: 110 கி.மீ வேகத்தில் அனல் பறக்கும் சோதனை ஓட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.