ETV Bharat / state

’தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டிருந்தால் விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கும்’ - தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

தூத்துக்குடி: தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டிருந்தால் விவசாயம், சிறு தொழில்கள் ஆகியவை பெரியளவில் பாதிக்கப்பட்டிருக்கும் என்று மாநிலங்களவை உறுப்பினர் டிகே ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

dk rangaraj pressmeet
author img

By

Published : Nov 7, 2019, 10:00 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள வ.உ.சி அரசு மேல்நிலைப் பள்ளியில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 30 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டன. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டிகே ரங்கராஜன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மத்திய அரசின் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்ற காரணங்களால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. இதனால் வேலைவாய்ப்பின்மை 45 ஆண்டுகளுக்குப் பின்பு அதிகமாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு துரித நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தப்படும்.

திருவள்ளுவர், வ.உ.சி., பாரதியார் ஆகியோரை அந்தக் காலகட்டத்தினை வைத்து பார்க்காமல், தற்போதைய காலகட்டத்தை வைத்து பார்ப்பது சட்டவிரோதமான நடவடிக்கையாகும். நீட் தேர்வை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டு, அதற்கு சாதகமான தீர்ப்பும் கிடைத்தது.

வகுப்பறைகளை திறந்து வைத்த எம்பி ரங்கராஜன்
வகுப்பறைகளை திறந்து வைத்த எம்பி ரங்கராஜன்

ஆனால் உச்ச நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை மறுத்துவிட்டதால், நீட் தேர்வு இன்று சட்டப்பூர்வமாகிவிட்டது. டெங்கு காய்ச்சல் குறைந்துள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி குறையவில்லை என்றால் அரசு கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும். தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாதது வரவேற்கத்தக்கது. ஒருவேளை கையெழுத்திட்டிருந்தால் சிறு தொழில்கள், விவசாயம் ஆகியவை பெரியளவில் பாதிக்கப்பட்டிருக்கும்” என்றார்.

இதையும் படிங்க: தோழர்கள் கொண்டாடிய நவம்பர் புரட்சி தினம்!

Intro:மத்திய அரசின் நடவடிக்கையால் 45 ஆண்டுகளுக்குப் பின்பு வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது -டி.கே.ரெங்கராஜன் எம்.பி. குற்றச்சாட்டு
Body:தூத்துக்குடி

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, பொருட்களுக்கு ஏற்றுமதி வாய்ப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் 45 ஆண்டுகளுக்கு பின்பு வேலைவாய்ப்பின்மை அதிகரித்து உள்ளதாகவும்,தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்துயிட்டு இருந்தால் விவசாயம்,சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டிருக்கும் என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி கே ரெங்கராஜன் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள வ.உ.சி அரசு மேல் நிலைப் பள்ளியில் சிபிஎம் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி கே ரெங்கராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 30 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் டி கே ரெங்கராஜன் எம்பி கலந்து கொண்டு வகுப்பறைகளை திறந்து வைத்தார்.

இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் மத்தியஅரசின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி, பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்பு குறைந்துள்ளது இதுபோன்ற காரணங்களால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து உள்ளது என்றும், படித்தவர்களுக்கு வேலை இல்லை என்பது 45 ஆண்டுகளுக்குப் பின்பு அதிகமாக உயர்ந்துள்ளதாகவும், திருக்குறள்,உ.வு.சி. பாரதியார் இவர்களை எல்லாம் அந்த காலகட்டத்தினை வைத்து பார்க்கமால் வேறு விதமாக பார்ப்பது சட்டவிரோதமான கிரிமினல் நடவடிக்கை என்றும், நீட் தேர்வு எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தங்கள் கட்சி சார்பில் வழக்குத் தொடர்ந்து சாதகமான தீர்ப்பு கிடைத்தது. உச்ச நீதிமன்றம் அந்த தீர்ப்பை மறுத்துவிட்டது. ஆகவே நீட் தேர்வு இன்று சட்டப்பூர்வமாக ஆகிவிட்டது. அதில் எப்படி செயல்படுத்துவது என்பதை நாம் முடிவு எடுக்க வேண்டும் என்றும்,டெங்கு காய்ச்சல் குறைந்துள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி குறைய வில்லை என்றால் அரசு கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும்,தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து இடாத காரணத்தினால் நம்மால் மூச்சுவிட முடிகிறது. கையெழுத்து இட்டு இருந்தால் சிறு தொழில்கள் விவசாயம் பாதிக்கப்பட்டு இருக்கும் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.