ETV Bharat / state

தூத்துக்குடி - மீளவிட்டான் இரட்டை ரயில் பாதை: 110 கி.மீ வேகத்தில் அனல் பறக்கும் சோதனை ஓட்டம்! - Madurai Railway Division

தூத்துக்குடி - மீளவிட்டான் இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவடைந்த நிலையில், 110 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. ஆய்வு பணிகள் முழுவதும் முடிந்த பிறகு தூத்துக்குடி-மதுரை ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

double track
அதிவேக ரயில் என்ஜின் சோதனை ஓட்டம்
author img

By

Published : Jul 11, 2023, 10:19 PM IST

மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் பி. அனந்த் செய்தியாளர்கள் சந்திப்பு

தூத்துக்குடி: திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு மதுரையில் இருந்து ஒரே அகல ரயில்பாதை மட்டுமே உள்ளது. இதனால் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்கள் மற்றும் வட மாநிலங்களுக்கு செல்வதிலும், அங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்குவதிலும் பல்வேறு சிரமங்கள் இருந்து வந்தன.

இது தொடர்பாக, தென்மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையை தொடர்ந்து மத்திய அரசு கடந்த 2012-13ஆம் ஆண்டு இரட்டை வழித்தடத்திற்கு அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து பொறியியல் குழுவினர் ஆய்வு நடத்திய பின்பு கடந்த 2015 –16ஆம் ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பின்னர் மதுரை- வாஞ்சிமணியாச்சி- தூத்துக்குடிக்கு 158.81 கிலோ மீட்டருக்கும், வாஞ்சிமணியாச்சி - நெல்லை - நாகர்கோவில் வரையில் 102 கிலோமீட்டர் தூரத்திற்கும் என திட்டம் தீட்டி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. தூத்துக்குடியில் இருந்து சென்னை உள்ளிட்ட நகரங்கள் செல்பவர்கள் பயண நேரத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் இந்த இரட்டை பாதை பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகள் ரூபாய் 1,890.66 கோடி செலவில் கடம்பூர் - தட்டப்பாறை, திருமங்கலம் - துலுக்கப்பட்டி, தட்டப்பாறை - மீளவிட்டான், துலுக்கப்பட்டி - கோவில்பட்டி, கோவில்பட்டி-கடம்பூர், மதுரை - திருமங்கலம் ஆகிய பிரிவுகளாக பிரித்து பணிகள் முடிக்கப்பட்டன. இந்த ரயில் பாதையில் அதிவேக ரெயில்கள் இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டன.

இறுதியாக, மீளவிட்டானில் இருந்து தூத்துக்குடி கீழுர் ரயில் நிலையம் வரையிலான 7.67 கிலோமீட்டர் தூர இரட்டை ரயில் பாதை பணிகள் நடந்து பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து, இன்று (ஜூலை 11) காலை 10 மணியளவில் தூத்துக்குடி மீளவிட்டானில் இருந்து மோட்டார் டிராலி மூலம் தண்டவாள பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு உள்ளதா எனவும் மின்மயமாக்க பணிகள் தரமாக செய்யப்பட்டு உள்ளதா என்பது குறித்து பெங்களூரு தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனந்த் மதுகர் சௌத்ரி தலைமையில் தலைமை திட்ட மேலாளர், ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் பி.கமலாகர ரெட்டி, முதன்மை திட்ட மேலாளர்-II ஸ்ரீ டி.கே. பத்மநாபன், தலைமைப் பொறியாளர் (பொது) தெற்கு ரயில்வே சென்னை ஸ்ரீ வி. தவமணி பாண்டி, தலைமைப் பொறியாளர் பாதை கொள்முதல் தெற்கு ரயில்வே சென்னை ஸ்ரீ கே. மஸ்தான் ராவ், கோட்ட ரயில்வே மேலாளர் மதுரை கோட்டம் பி.அனந்த் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அதன்படி, தட்டப்பாறை ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6:30 மணிக்கு ரயில் என்ஜின் புறப்பட்டு இந்த என்ஜின் 6:50 மணிக்கு தூத்துக்குடியை வந்தடைந்தது. இதுகுறித்து மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் பி. அனந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், "முடிவுற்றுள்ள பணிகளில் பாதுகாப்பு அம்சங்களை பார்வையிட்டோம். இதில், ரயில் தண்டவாளம், வளைவு ரயில் பாதை, மின்சார வயர் கிராசிங், சிக்னல் பணிகள், மின்மயமாக்கல் பணிகள், ரயில் பாதை இணைப்புகள் என பல்வேறு பணிகளை ஆய்வு செய்து, ரயில் சோதனை ஓட்டம் 110 கிலோமீட்டரில் இருந்து 120 கிலோமீட்டர் வரை நடைபெற்றது. இந்த ரயில் சேவை ஆய்வு முழுவதும் முடிந்த பிறகு தூத்துக்குடி-மதுரை ரயில்கள் இயக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க:வீட்டின் கொல்லை புறத்தில் தேனீ வளர்ப்பு.. மாதம் ரூ.40 ஆயிரம் லாபம் பார்க்கும் விவசாயி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.