தூத்துக்குடி: மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் மகன் தேஜஸ் தாக்கரே. இவரின் தலைமையில் ’தாக்கரே வோர்ல்டு லைவ் பவுண்டேஷன்’ என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பு இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் பல வகையான உயிரினங்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடியில் உள்ள வல்லநாடு மலைப்பகுதிகளிலும், கோவில்பட்டி அருகே உள்ள குறுமலை என்னும் பகுதியில் உள்ள காப்புக்காடு பகுதியிலும், புதிய வகை பல்லி இனம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இந்த மலைகளில் உள்ள புதர்களில் இருந்து புதிய வகை கெக்கோ ஹெமிடாக்டைலஸ் குவார்ட்சிடிகோலஸ் எனப்படும் பல்லி இனம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து இதனை ஆய்வு செய்து வரும் ஆய்வாளர் ராமேஸ்வரன் கூறியதாவது, "வல்லநாடு, மணக்கரை மற்றும் குருமலை காப்பு காட்டில் உள்ள பெருமாள் கோவில் அருகே இந்த புதிய இனத்தை கண்டுபிடித்துள்ளோம். புதிய இனங்கள் இந்திய ஹெமிடாக்டைலஸ்.
இந்த பல்லிகள் மிகவும் அடர்த்தி நிரம்பிய டியூபர்கிள்களை கொண்டு உள்ளது. இந்திய கதிர்வீச்சின் 37 ஹெமிடாக்டைலஸ் இனங்கள் இப்போது தீபகற்க இந்தியாவில் மட்டுமே உள்ளது. இதில், 10 பல்லிகள் மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், இரண்டு பல்லிகள், கிழக்கு தொடர்ச்சி மலைகளிலும், 25 பல்லிகள் தீபகற்க இந்தியாவின் பிற பகுதியிலும் உள்ளன. இந்த குழுவில் மூன்றாவது எழுத்தாளரான நான் காணும் போது வல்லநாடு மலையில் தூத்துக்குடி ப்ரூக்கிஷ் கெக்கோக்கள் ஏராளமாக இருப்பதையும், குருமலையில் குறைவாகவே இருப்பதையும் கண்டறிந்து உள்ளேன்’’ எனக் கூறினார்.
இதையும் படிங்க: Viral: பாரளை எஸ்டேட் பகுதியில் பலா மரத்தில் ஏறி பழத்தை பறிக்கும் யானை