ETV Bharat / state

சிஏஏவுக்கு எதிரான கூட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பு!

author img

By

Published : Mar 1, 2020, 12:43 PM IST

தூத்துக்குடி: நாம் அனைவரும் இந்திய குடிமக்கள் இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கூட்டத்தில் 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கூட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான பொதுக்கூட்டம் தூத்துக்குடி திரு இருதய பேராலய திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தை தூத்துக்குடி மாவட்ட கிறிஸ்தவ ஒன்றிப்பு கூட்டமைப்பு, அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு ஆகியவை இணைந்து உருவாக்கிய ‘நாம் அனைவரும் இந்திய குடிமக்கள் இயக்கம்’ சார்பில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். இதில் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள், சமுதாய நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரபலங்கள், இஸ்லாமிய மக்கள், கிறிஸ்தவ மக்கள், மத போதகர்கள் உள்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆயர் ஸ்டீபன்
கிறிஸ்தவ, இஸ்லாமிய இயக்கங்கள் இணைந்து சிஏஏ சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் அதிகப்படியான மக்கள் பங்கேற்றதால், திரு இருதய பேராலயத்தை சுற்றிலும் பலத்த காவல்துறையின் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.