தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலிருந்து வெளிமாவட்டத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் கலை கதிரவனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இவரது உத்தரவின்பேரில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் துறையினர் மந்தித்தோப்பு சாலையில் சோதனை செய்தனர். அப்போது தனியார் குடோனிலிருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை மூன்று பேர் லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
அவர்களைக் கைதுசெய்த காவல் துறையினர், 50 ரேஷன் அரசி மூட்டைகளைப் பறிமுதல்செய்தனர். விசாரணையில் அவர்கள் இனாம் மணியாச்சியைச் சேர்ந்த தனியார் குடோன் உரிமையாளர் பால் பாண்டியன் (33), கோவில்பட்டியைச் சேர்ந்த மகேந்திரன் (32), கோவில்பட்டி அண்ணா தெருவைச் சேர்ந்த ஜெயராமன் (37) ஆகியோர் என்பது தெரியவந்தது.
தற்போது ரேஷன் அரசி மூட்டைகளைக் கடத்த முயன்ற மூன்று பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: ரேஷன் அரிசி கடத்தல் கும்பலுக்கு நேரடியாக உதவியது யார்? காவல் துறை விசாரணை!