ETV Bharat / state

அடிப்படை வசதிகளின்றி 40 வருடங்களாக தவிக்கும் மக்கள்! - Vishnupuram

திருவாரூர்: விஷ்ணுபுரம் அருகே உள்ள கரையான் திடல் பகுதியில் நாற்பது வருடங்களாக மின்சாரம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவதியுற்று வருகின்றன.

village
author img

By

Published : Aug 8, 2019, 6:28 PM IST

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் விஷ்ணுபுரம் ஊராட்சியில் சுமார் 40 வருடங்களுக்கு முன்பு சாலை விரிவாக்கப் பணிக்காக அங்கு குடியிருந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, அப்பகுதிக்கு அருகே உள்ள கரையான் திடல் பகுதியில் குடியேற்றப்பட்டனர்.

விஷ்ணுபுரம்
கரையான் திடல் பகுதி

இதனையடுத்து அங்கு உள்ள மக்கள் தங்களுக்கு அடிப்படைத் தேவைகளான குடிநீர், சாலை, கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தினர். மேலும் இந்த அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக்கோரி சாலை மறியல் என பலகட்ட போராட்டங்களை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள நிலையில் இதுவரை எந்தவித அடிப்படை தேவையும் பூர்த்தி செய்யப்படவில்லை.

விஷ்ணுபுரம்
குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லை
இந்த அடிப்படைத் தேவைகளில் ஒன்றான மின்சார வசதி இல்லாததால் இரவு நேரத்தில் ஒருவரை பாம்பு கடித்து உயிரிழந்த அவல நிலையும் நடந்தது. மேலும், குழந்தைகள் இரவு நேரங்களில் தங்களுடைய வீட்டுப்பாடங்கள் செய்யவும், படிக்கவும் முடியாத நிலையில் உள்ளனர்.
இதேபோல் தங்களுடைய கைப்பேசிகளை சார்ஜ் போடுவதற்குகூட நகர் பகுதிக்கு வந்து அதற்கான பணம் செலவிடும் அவல நிலையும் உள்ளது. வயதுக்கு வந்த பெண்கள் தங்கள் இயற்கை உபாதைகளை கழிக்கக் கூட கழிவறை வசதி இல்லாமல் மிகவும் அவதிப்படுகின்றனர்.
விஷ்ணுபுரம்
அனைத்தும் உள்ளன. ஆனால் அடிப்படை வசதிகள் இல்லை
விஷ்ணுபுரம்
மின்சார வசதி இல்லை
தங்களுடைய பகுதி சினிமாவில் வரும் அத்திப்பட்டி கிராமம் போன்று உள்ளது. இந்நிலை தொடர்ந்தால் எங்கள் கிராமத்துடன் நாங்களும் அழியும் நிலை ஏற்படும். எனவே தமிழ்நாடு அரசு எங்களுக்கான அடிப்படைத் தேவைகளை விரைவில் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் மக்கள்

Intro:

Body:அமைச்சர் காமராஜ் தொகுதியில் 40 வருடங்களாக மின்சாரம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் சிக்கி தவிக்கும் கிராம மக்கள். இந்நிலை தொடருமாயின் சினிமாவில் வரும் அத்திப்பட்டி கிராமம் போல் அழிந்துவிடும் என வேதனை தெரிவிக்கின்றனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் விஷ்ணுபுரம் ஊராட்சி உள்ளது. இப்பகுதியில் சுமார் 40 வருடங்களுக்கு முன்பு சாலை விரிவாக்க பணிக்காக அங்கு கூடியிருந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு அப்பகுதிக்கு அருகே உள்ள கரையான் திடல் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியேறி திடீர் குப்பமாக உருவெடுத்தது. இதனை அடுத்து அங்கு உள்ள மக்கள் தங்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர்,சாலை வசதி,கழிவறை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தினர். மேலும் இந்த அடிப்படைத் தேவைகள் குறித்து சாலை மறியல் மாவட்ட ஆட்சியரிடம் மனு என பலகட்ட போராட்டங்களை நடத்தி உள்ள நிலையில் இதுவரை அப்பகுதியில் எந்தவித அடிப்படை தேவையை பூர்த்தி செய்யப்படவில்லை.

இந்த அடிப்படைத் தேவைகளில் ஒன்றான மின்சார வசதி இல்லாததால் இரவு நேரத்தில் ஒருவரை பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார். மேலும் குழந்தைகள் இரவு நேரங்களில் தங்களுடைய வீட்டுப்பாடங்கள் செய்யவும், படிக்கவும் முடியாத நிலையில் உள்ளனர். இதேபோல் தங்களுடைய கைப்பேசிகளை சார்ஜ் போடுவதற்கு கூட நகர் பகுதிக்கு வந்து அதற்கான பணம் செலவிடும் அவல நிலையும் உள்ளது. வயது வந்த பெண்கள் தங்கள் இயற்கை உபாதைகளை கழிக்க கூட கழிவறை வசதி இல்லாமல் மிகவும் அவதிப்படுகின்றனர்.

தற்போது ஆளும் ஆட்சியாளர்கள் தேர்தல் சமயங்களில் எங்களுக்கு அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்து வீட்டுமனை பட்டா தருவதாகவும் தெரிவித்தனர். ஆனால் தேர்தல் முடிந்த பின் எங்களை வந்து சந்திப்பது கூட இல்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

தங்களுடைய பகுதி சினிமாவில் வரும் அத்திப்பட்டி கிராமம் போன்று உள்ளது இந்நிலை தொடர்ந்தால் எங்கள் கிராமத்துடன் நாங்களும் அழியும் நிலை ஏற்படும் எனவே தமிழக அரசு உங்களுக்கான அடிப்படைத் தேவைகளை விரைவில் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த பகுதி தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சொந்த தொகுதி ஆகும், மேலும் இவர் இந்த தொகுதியில் கடந்த முறையும் அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.