திருவாரூர்: தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா தலைமையிலும்,அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையிலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் புண்ணியகோடி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு!