திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்ததைத் தொடர்ந்து நேற்று சட்டப்பேரவையில் சட்டமுன் வடிவு தாக்கல் செய்யப்பட்டது.
இந்தச் சட்டமுன் வடிவிற்கு குடியரசுத் தலைவரும் மத்திய அரசும் ஒப்புதல் வழங்க வேண்டும். விவசாயிகளின் பல கட்ட போராட்டங்களால்தான், காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது என்பதை மத்திய அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.
ஹைட்ரோ கார்பன், உள்ளிட்ட பேரழிவுத் திட்டங்களுக்கான அனுமதியை ரத்துசெய்து கைவிட இந்தச் சட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் வழிவகை செய்ய வேண்டும். சிதம்பரம், சீர்காழி உள்ளிட்ட 47 கிராமங்களில் ஹைட்ரோகார்பன் கச்சா எண்ணெய் எடுப்பதைக் கைவிட வேண்டும். ஒ.என்.ஜி.சி. கிணறுகள் அமைக்க தமிழ்நாடு அரசு இனி அனுமதியளிக்கக் கூடாது" என்றார்
இதையும் படிங்க: இயற்கை விவசாயத்தை கையிலெடுத்து பசுமை கண்ட பட்டதாரி!