ETV Bharat / state

திருவாரூரில் 1500-ஐ கடந்த கரோனா பாதிப்பு - thiruvarur corona positive cases

திருவாரூர் மாவட்டத்தில் இன்று மேலும் 125 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 541ஆக அதிகரித்துள்ளது.

thiruvarur crossed thousand five hundred corona positive cases

author img

By

Published : Jul 28, 2020, 6:55 PM IST

திருவாரூர் மாவட்டத்தில் நேற்றுவரை கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 416ஆக இருந்த நிலையில் இன்று மேலும் 125 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த 88 பேருக்கு இன்று ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இந்த பகுதியைச் சேர்ந்த 170 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்ததில் 88 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் மன்னார்குடி உப்புகார தெரு பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேருக்கும், திருவாரூர் காட்டுகார பகுதியை சேர்ந்த 11 வயது மற்றும் 13 வயது சிறுமி உள்பட மூன்று நபர்களுக்கும் என மொத்தம் 125 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து குடவாசல் பகுதியில் அதிக அளவில் தொற்று பாதிப்பு ஏற்பட்டுவருவதால், குடவாசல் பேரூராட்சிக்கு உள்பட்ட அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் பெட்ரோல் நிலையங்களை வருகின்ற 30ஆம் தேதிவரை முழுமையாக அடக்க மாவட்ட ஆட்சியர் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.