திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 72 ஆயிரம் ஹெக்டேர் ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி, குறுவை உள்ளிட்ட நெற்பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு குடிமராமத்துப் பணிகள் எனும் பெயரில் முக்கிய ஆறுகள், குளங்கள் மட்டுமே தூர்வாரப்பட்டன. பல்வேறு பகுதிகளில் கிளை ஆறுகள், பி, சி சேனல் வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை.
இந்நிலையில் தற்போது வரும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து 11 மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக நீர் திறந்துவிடப்படவுள்ளது. திறந்து விடப்படும் தண்ணீர் உரிய நேரத்தில் பயிர்களுக்கு சென்றடையாத வகையில் கிளை ஆறுகள், வாய்க்கால்கள் முட்புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் குடிமராமத்துப் பணிகளை தொடங்க உத்தரவிட வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : இந்தியன் 2 படம் தாமதம்: லைகா நிறுவனமே காரணம் இயக்குநர் ஷங்கர் குற்றச்சாட்டு!