ETV Bharat / state

'சசிகலா வெளியே வருவரா என்பது கேள்விக்குறி' - சிரித்துக்கொண்டு பதிலளித்த திவாகரன்! - sasikala jail life

திருவாரூர்: சிறையிலுள்ள சசிகலா ஜனவரி மாதத்திற்குள் வெளியே வருவாரா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் மன்னார்குடியில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் தெரிவித்துள்ளார்.

சசிகலா சகோதரர் திவாகரன்  அண்ணா திராவிடர் கழகம்  சசிகலா சிறை குறித்து திவாகரன்  sasikala brother party  jayalalitha 3rd death anniversary  sasikala jail life  சசிகலா வெளியே வருவாரா
சசிகலா வெளியே வருவரா என்பது கேள்விக்குறி- சசிகலாவின் சகோதரர் திவாகரன்
author img

By

Published : Dec 5, 2019, 8:30 PM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. வி.கே. சசிகலாவின் சகோதரரும் அண்ணா திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளருமான திவாகரன், தனது கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த, ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்பு செய்தியாளர்களிடம் திவாகரன் பேசினார். அப்போது சசிகலா சிறையில் இருந்து வந்தவுடன் அதிமுக, அமமுக, அண்ணா திராவிடர் கழகம் ஆகிய மூன்று இயக்கமும் ஒன்று சேர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, "மூன்று இயக்க தொண்டர்களின் மனநிலை அப்படிதான் உள்ளது.

ஆனால், சசிகலா ஜனவரி மாதத்தில் வெளியே வருவாரா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. தற்போது, சசிகலாவை வெளியில் வரவிடாமல் சிறையில் வைத்துக்கொண்டே வெளியில் அரசியலை நடத்தி வருகிறார்கள். இதனை அறிந்த தங்க தமிழ்ச்செல்வன், புகழேந்தி ஆகியோர் இயக்கத்தை விட்டு வெளியேறிவிட்டனர். அரசியலில் நேர்மை இருக்க வேண்டும் " என்று பதிலளித்தார்.

'சசிகலா வெளியே வருவரா என்பது கேள்விக்குறி'- சசிகலாவின் சகோதரர் திவாகரன்

மேலும் பேசிய அவர், "உள்ளாட்சித் தேர்தலை ஒரு கட்டமாக நடத்தினால் தான் அது நல்ல தேர்தலாக இருக்கும். பொங்கல் தை மாதம் தான் வருகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு மக்களுக்கு கார்த்திகை மாதமே பொங்கல் பரிசு கொடுத்துவிட்டு உள்ளாட்சித் தேர்தலை அறிவித்துள்ளனர். இதை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது" என்று குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க: பொன். மாணிக்கவேலிடமிருந்து ஆவணங்கள் வரவில்லை - புதிய ஐஜி அன்பு

Intro:Body:சசிகலாவை வெளியே வருவதற்கான எந்தவித முகாந்திரமும் தெரியவில்லை. அவரை சிறையிலேயே வைத்து கொண்டு அரசியல் செய்யதான் அவரை நம்பியுள்ளவர்கள் நினைப்பதாக மன்னார்குடியில் திவாகரன் பேட்டி .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில்
மறைந்த தமிழக முன்னால்  முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தின தினத்தை முன்னிட்டு
அண்ணா திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் வி.கே சசிகலாவின் சகோதரர் திவாகரன் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். அதன் பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித அவர்  கூறியதாவது,

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அதிமுக,அமமுக, அண்ணா திராவிட கழகம் ஆகிய மூன்று இயக்கமும் ஒன்று சேர வாய்ப்புள்ளதா என்ன கேள்விக்கு,
மூன்று இயக்க தொண்டர்களின் மனநிலை அப்படி தான்  உள்ளது. ஆனால் சசிகலா ஜனவரி மாதத்தில் வெளியே வருவாரா அவரை சேர்ந்தவர்கள் வரவிடுவார்களா என்பது கேள்விக்குறியாகதான் தற்போது  உள்ளது . அவரை சிறையிலேயே வைத்துக் கொண்டு இங்கு அரசியலை நடத்துவதற்கு தான்   அவரை நம்பியுள்ளவர்கள்  செய்கிறார்கள். இதனை அறிந்த ஒவ்வொருவரும் இயக்கத்தை விட்டு வெளியே போய்விட்டார்கள். அதை புரிந்து முதலில் வெளியே வந்தது நான் தான் முதலில் அரசியலில் ஓர் நேர்மை இருக்க வேண்டும் பண பலத்தை வைத்து கொண்டு ருசி பார்க்க கூடாது .

உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்தினால்  தான் அது நல்ல தேர்தலாக இருக்கும். பொங்கல் தை மாதம் தான் வருகிறது கார்த்திகை மாதத்திலேயே மாநில அரசு பொங்களல் பரிசு கொடுத்து உள்ளாட்சி தேர்தலை அறிவித்துள்ளார்கள். இதை தமிழக தேர்தல்ஆணையம் கண்டுகொள்ளவில்லை என குற்றம்சாட்டினார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.