ETV Bharat / state

ரியல் எஸ்டேட் தொழிலதிபரை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு - ரியல் எஸ்டேட்

திருவாரூர்: ரியல் எஸ்டேட் தொழிலதிபர் நீதி மோகனை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட 300க்கு மேற்பட்டோர் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Thiruvarur real estate
real estate forgery
author img

By

Published : Mar 16, 2020, 5:28 PM IST

திருவாரூர் மாவட்டத்தில், கடந்த 2009ஆம் ஆண்டு கிருஷ்ணா ரியல் எஸ்டேட் என்ற பெயரில் மாதத் தவணை மூலம் வீட்டுமனைகள் வழங்குவதாகக் கூறி, நீதி மோகன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

இதன் மூலமாக திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட கிளைகளை திறந்து கிட்டத்தட்ட 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் மாதத் தவணை மூலம் வீட்டு மனைகள் வழங்குவதாக உறுப்பினர்களாக சேர்ந்து அவர்களிடமிருந்து மாதம் ரூபாய் ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை ரொக்கமாக பெற்றுள்ளதாகவும், இதுவரை சுமார் 250 கோடி ரூபாய் வரை வாடிக்கையாளர்களின் பணத்தை மோசடி செய்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ரியல் எஸ்டேட் தொழிலதிபரால் பாதிக்கப்பட்ட நபர்கள்.

இதுகுறித்து காவல்துறையிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை நீதி மோகன் ஏன் கைது செய்யவில்லை என புகார் தெரிவிக்கின்றனர். இதில் பல காவல்துறையினர் நீதி மோகனிடம் பணம் கட்டிவிட்டு ஏமாந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து பணம் செலுத்திவிட்டு நிலம் கிடைக்காத திருவாரூர், மன்னார்குடி, நன்னிலம், பேரளம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு, ”நீதி மோகனை உடனடியாக கைது செய்து அவரிடமிருந்து தங்களுக்கு வர வேண்டிய வீட்டுமனைகளை பெற்றுத்தர வேண்டும் அல்லது தாங்கள் கட்டிய பணத்தை ரொக்கமாக திருப்பி வழங்க வேண்டும்” என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு.

காவல்துறையினர் சமாதானப்படுத்தி கோரிக்கை மனுக்களை பெற்று மாவட்ட ஆட்சியர் ஆனந்திடம் சமர்ப்பித்தனர் இதையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் ஆனந்த் பாதிக்கப்பட்ட மக்களிடம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தொழிலதிபர் வீட்டில் ரூ.10 லட்சம் கொள்ளை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.