திருவாரூர்: திருத்துறைப்பூண்டி நகராட்சி 11ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிபிஎம் நகரச் செயலாளர் ரகுராமன் மனைவி ராமலோக ஈஸ்வரி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை திமுக தலைமை நேற்று (மார்ச் 3) நகராட்சி துணைத் தலைவராக அறிவித்தது.
இந்த நிலையில் இன்று (மார்ச் 4) அதிகாலை 2 மணி அளவில் அவரது வீட்டின் வாசலில் அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து திருத்துறைப்பூண்டி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: Video: அதிமுகவைப் பற்றி சசிகலா சொன்னது என்ன தெரியுமா?