திருவாரூர்:தமிழ்நாட்டில் ஏப். 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. தேர்தல் பறக்கும் படையினர் பணப் பட்டுவாடாவை கட்டுப்படுத்த சோதனைச்சாவடிகள் அமைத்து வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பண்டாரவாடை அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை மறித்து, சோதனை செய்தபோது, தனியார் நிதி நிறுவனத்தின் ரூ. 97,630 பணம் இருப்பது தெரியவந்தது. அதற்கு உரிய ஆவணமும் இல்லாததால் அதனைக் கைப்பற்றி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
அதேபோல், பண்டாரவாடை பகுதியில் நெல் வியாபாரி பிரபாகரன் என்பவரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு நன்னிலம் வட்டாட்சியர் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதேபோல், வலங்கைமான் அருகே நடைபெற்ற சோதனையில், ஒரு லட்சத்து,64 ஆயிரத்து,494 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க:பறக்கும் படையா.. பதற வைக்கும் படையா! - சிக்கிய ரூ. 4,57,500