திருவாரூரில் ரம்ஜான் நோன்பு கஞ்சி காய்ச்ச பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பல தகவல்களைக் கூறினார்.
அதில், "கரோனா பரவுவதைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி தலைமைச் செயலாளர்கள், தமிழ்நாடு ஹாஜிகளை அழைத்து நோன்பு கஞ்சிக்கு எவ்வாறு அரிசி வழங்குவது என ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள 2 ஆயிரத்து 895 பள்ளிவாசல்களும், அப்பகுதியில் வாழும் இஸ்லாமிய மக்களை கணக்கிட்டு ஒரு நபருக்கு 150 கிராம் வீதம் 5 ஆயிரத்து 450 மெட்ரிக் டன் அரிசி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜமாத்தார்கள் மூலமாக அரசு வழங்குகின்ற அரிசியை பெற்று, இஸ்லாமிய மக்கள் வீட்டிலேயே நோன்பு கஞ்சி காய்ச்சிக் கொள்ளவேண்டும். பள்ளிவாசல்கள் மூலமாக அனைத்து வீடுகளுக்கும் வருகிற 24ஆம் தேதிக்குள் அரிசி கொடுக்கப்பட்டுவிடும் .
தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு தளர்வு செய்யப்படுவது குறித்து சூழ்நிலையின் அடிப்படையில் தான் முதலைமைச்சர் முடிவெடுப்பார். கரோனாவை வைத்து அரசியல் யார் செய்கிறார்கள் என்பது ஊர் உலகத்துக்கு தெரியும்; மக்கள் பிரச்னைகளை வைத்து அதிமுக அரசுக்கு அரசியல் செய்ய தெரியாது. எதிர்க்கட்சிகள் தான் இதில் அரசியல் செய்வதாகத் தெரிவித்தார்".
இதையும் பார்க்க: விவசாய கடன் தள்ளுபடி குறித்து ஆர்.பி.ஐ. அறிவிப்புகளில் குறிப்பிடப்படவில்லை - கேரள நிதியமைச்சர்