ETV Bharat / state

சங்கரய்யா பிறந்தநாள் பேனர் கிழிப்பு - சாலை மறியல்

author img

By

Published : Jul 17, 2021, 4:51 PM IST

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யாவின் பேனரை கிழித்த காவல் துறையினரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Marxist Communist Party protest against police
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

திருவாரூர்: விடுதலை போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான என்.சங்கரய்யா, ஜூலை 15ஆம் தேதி 100ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

அதன் ஒரு பகுதியாக, நன்னிலம் அருகே கொல்லுமாங்குடி கடை வீதியில் , சங்கரய்யாவின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேனர் வைத்திருந்தனர். அதனை நேற்று (ஜூலை16) காவல் துறையினர் இரவோடு இரவாக கிழித்து அப்புறப்படுத்தினர்.

இதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வீரபாண்டியன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் பேனரைக் கிழித்த காவல் துறையினரை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கண்டன முழக்கங்கள் எழுப்பட்டன.

சுமார் 100 பேருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த சாலை மறியல் போராட்டத்தால், திருவாரூர் - மயிலாடுதுறை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: பாதியில் நிறுத்தப்பட்ட ஓஎன்ஜிசி பணி: நிலத்தைச் சீரமைக்கக் கோரும் உழவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.