ETV Bharat / state

ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கோயிலில் குடமுழுக்கு - திரளானோர் பங்கேற்பு! - Tanjore news

தஞ்சை பெரிய கோயில் எழுப்புவதற்கு முன்பு ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வல்லம் பிள்ளையார்பட்டி ஸ்ரீ ஹரித்ரா விநாயகர் கோயிலின் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

பிள்ளையார்பட்டியில் இராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமையான கோயில் கும்பாபிஷேகம் !

author img

By

Published : Jul 9, 2023, 7:14 PM IST

ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கோயிலில் குடமுழுக்கு - திரளானோர் பங்கேற்பு!

தஞ்சாவூர்: தஞ்சை பிள்ளையார்பட்டியில் புகழ்பெற்ற அருள்மிகு ஶ்ரீ ஹரித்ரா விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இது இராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமையான கோயில் ஆகும்.

தஞ்சாவூரை அடுத்த வல்லம் பிள்ளையார்பட்டி ஊராட்சியில் புகழ்பெற்ற சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீ ஹரித்ரா விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இது பார்ப்பதற்கு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் போல உருவத்தில் பெரியது. இங்கு மூலஸ்தானத்தில் மூலவராக விஸ்வரூப வடிவில் உருவத்தைக் கொண்ட ஹரித்ரா விநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இக்கோயில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது எனக் கூறப்படுகிறது. ராஜராஜ சோழன் முதலில் தஞ்சாவூர் பெரிய கோவிலில் பெரிய உருவில் பிள்ளையார் சிலையை நிறுவிட முற்பட்டு, இதற்கென பிரத்யேகமாக ஒற்றை கல்லினால் பிள்ளையார் சிலையை வடிவமைத்து பெரிய கோவிலில் நிறுவ தஞ்சையை நோக்கி எடுத்து வந்துள்ளார். ஆனால், தலைமை சிற்பி, உருவில் பெரிய பிள்ளையார் ஈசனுக்கு சமமாக பெரிய கோயிலில் இடம் பெற விரும்பவில்லை.

பிள்ளையாருக்கு 32 திருவுருவங்கள் உண்டு. அதில் 21வது திருவுருவம் ஹரித்ரா என்பதாகும். இந்த ஹரித்ரா விநாயகர் ஏற்றிவந்த வண்டியின் அச்சு பிள்ளையார்பட்டி அருகில் வந்தபோது முறிந்து போனது. அப்போது வண்டியில் இருந்த ஹரித்ரா கணபதி இங்கு வந்து அமர்ந்து கொண்டார். எவ்வளவு முயன்றும் விநாயகர் சிலைகளை தஞ்சைக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை.

இதையும் படிங்க: திருப்பனந்தாள் பெரியநாயகி செஞ்சடையப்பர் கோயில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு!

உடனடியாக சிற்பி மன்னனிடம் சென்று தகவல் தெரிவித்தான். மாமன்னன் ராஜராஜன் சோழன் 'ஹரித்ரா விநாயகர்' என்கிற திருநாமம் கொண்ட பிள்ளையாருக்கு கோயில் கட்டினார். பிள்ளையார் அமர்ந்த இடம் பிள்ளையார்பட்டி என அழைக்கப்படுகிறது. இவர் கேதுவின் அதிபதி என அறியப்படுகிறார். பொதுவாக இராகு கேது தோஷம் உள்ளவர்கள், இங்கு செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தி அன்று அருகம்புல் மாலை சாற்றி வாழைப்பழங்கள் மாலை சாற்றி வழிபட்டால் எப்பேர்ப்பட்ட கிரக தோஷமும் அண்டாது என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாகவுள்ளது.

தஞ்சை பெரிய கோவிலில் வழிபாடு செய்யும் முன்னர் இங்குள்ள ஹரித்ரா விநாயகரை வழிபட்டுச் சென்றால் நினைத்த காரியங்கள் யாவும் கைகூடும் என்பது ஐதீகம். இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி அன்றும் 16 வகை செல்வங்கள் வேண்டி, 16 வகையான திரவியங்களால் மாபெரும் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெறுவது வழக்கம்.

இங்கு மூலஸ்தானம் நுழைவாயில் வலது புறத்தில் கணபதி இடது புறத்தில், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சந்நிதி உள்ளது. இக்கோவிலில் பரிவார தெய்வங்களாக லிங்கம், நந்தி, கால பைரவர், துர்க்கை அம்மன், நாகலம்மன், தெட்சிணாமூர்த்தி, அய்யனார் எனத் தனி தனியாக காணப்படுகின்றனர்.

மேலும் ஶ்ரீ தையல் நாயகி சமேத ஶ்ரீ வைத்தீஸ்வர சுவாமி, சண்டிகேஸ்வரர், அய்யப்பன், நவக்கிரகங்கள், லோபமுத்திரை உடனுறை அகத்தியர் சிலைகள் பிரதிஷ்டை செய்து உள்ளனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ ஹரித்திரா விநாயகர் கோவிலில் இன்று ஜூலை 9ம் தேதி கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

8 அடி உயரத்தில் ஒரே கல்லால் சுவாமியை செதுக்கி கோயில் எழுப்பி இராஜராஜ சோழனால் வழிபடப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனையொட்டி நான்காம் கால யாகபூஜை பூராணஹதியுடன் நிறைவு பெற்று, மங்கள வாத்யங்கள் முழங்க யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க புனிதநீர் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்கள்.

இதையும் படிங்க: விளைவித்த பொருளுக்கு விலையில்லை..பருத்திக்கு உரிய விலை கிடைக்க வேண்டி போராடிய விவசாயிகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.