திருவாரூர்: குடவாசல் அருகே தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சரவணன் தலைமையிலான விவசாயிகள், உபரிநீர் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி, வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், மேட்டூர் அணையைச் சட்டவிரோதமாக உடைத்து, உபரிநீர் திட்டம் என்ற பெயரில் காவிரி டெல்டாவை அழிக்கும் உள்நோக்கத்தோடு தமிழ்நாடு முதலமைச்சர் கே. பழனிச்சாமி நடந்து கொள்வதாகக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தை உடனே கைவிட வலியுறுத்தியும், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டு, வயலில் இறங்கிக் கறுப்புக் கொடி ஏந்தி, மாநில அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.