ETV Bharat / state

மணல்மேடு ஜவுளி பூங்காவில் கரூர் ஆட்சியர் ஆய்வு! - karur collector

கரூர்: மணல்மேடு ஜவுளி பூங்காவில் முறையாக அனுமதி பெற்று இயங்கும் தொழிற்சாலைகளில் அரசு அறிவித்துள்ள விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் இன்று ஆய்வு செய்தார்.

karur collector inspection in textile park  karur collector  கரூர் மாவட்ட ஆட்சியர்
மணல்மேடு ஜவுளி பூங்காவில் கரூர் ஆட்சியர் ஆய்வு
author img

By

Published : May 7, 2020, 7:45 PM IST

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்து தொழிற்சாலைகள் இயங்க அரசு அனுமதியளித்திருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று பெரும்பாலான தொழிற்சாலைகள் 43 நாட்களுக்குப் பிறகு இயங்கத்தொடங்கின.

இந்தச் சூழ்நிலையில், கரூர்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மணல்மேடு ஜவுளி பூங்காவில் முறையாக அனுமதி பெற்று இயங்கும் தொழிற்சாலைகளில் அரசு அறிவித்துள்ள விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் இன்று ஆய்வுசெய்தார்.

இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கோவிட் 19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரியான நேரத்தில் எடுக்கப்பட்டதால் கரூர் மாவட்டத்தில் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் தொழிலாளர்களின் பொருளாதார நலன் கருதியும், தொழில் முனைவோர், தொழில் நிறுவனர்களின் நலன் கருதியும், தமிழ்நாடு அரசு சில கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளை அறிவித்தது.

கரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை நகரப்பகுதிகளில் சுமார் 300 நிறுவனங்களும், ஊரகப்பகுதிகளில் சுமார் 100 நிறுவனங்களும் முறையாக அனுமதி பெற்று இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில் அரசின் விதிகள் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அனுமதி கேட்கும் நிறுவனங்களை அரசுத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு அரசின் விதிகளைப் பின்பற்றி அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படுகின்றது. மேலும், அரசிடம் முறையாக அனுமதி பெறாமலோ, அனுமதி பெற்று அரசின் விதிகளைப் பின்பற்றாமல் தொழில் நிறுவனங்கள் இயக்கப்படுவது ஆய்வின்போது கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: செடியிலேயே பாழாகும் மல்லிகைப் பூக்கள்: உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.