திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் இரவு பகல் பாராமல் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்கள் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலும் ஆதிரெங்கம் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் சார்பில் 60 குடும்பங்களுக்கு அதிக ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த மாப்பிள்ளை சம்பா அரிசி வழங்கப்பட்டது. இதனை கரோனா கண்காணிப்பு அலுவலரும் வேளாண் இணை இயக்குனருமான சிவக்குமார் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் சந்திரசேகரன், சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலம், நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் ராஜிவ் மற்றும் பாலம் செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மீன் மார்க்கெட்டாக மாறிய பேருந்து நிலையம்