ETV Bharat / state

ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி விவசாயிகள் மனு!

திருவாரூர்: மன்னார்குடி அருகே திருமகோட்டை ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றகோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி விவசாயிகள் கோரிக்கை மனு

author img

By

Published : Sep 17, 2020, 3:00 PM IST

இது குறித்து திருமக்கோட்டை விவசாய அணியின் தலைவர் வெங்கடாசலம் செய்தியாளர்களிடம் கூறுகையில், “திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலேயே மிகப் பெரிய ஏரியாக திகழ்ந்து வருவது மன்னார்குடி திருமகோட்டை ஏரி. சுமார் 768-ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியை நம்பி திருமகோட்டை, வல்லூர், பரவாக்கோட்டை, ஆவிக்கோட்டை, மகாராஜபுரம், இளவனூர், செங்கோட்டை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீராதாரத்தை பூர்த்தி செய்தும் விவசாயிகளுக்கும் பயன்பட்டுவந்தது.

ஆனால் தற்போது இந்த ஏரியை பல்வேறு தரப்பினரும் ஆக்கிரமித்து வருகின்றனர். குறிப்பாக அந்த ஏரியை சுற்றியுள்ள பகுதியில் விவசாய நிலங்கள் வைத்துள்ள நபர்களாலும், மீன் குட்டைகள் வைத்துள்ள நபர்களாலும், அரசாங்கத்தால் முன்னாள் ராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள இலவசமனை அனுபவித்துவரும் நபர்களாலும், திருமேனியின் ஏரி நீர்நிலை பகுதிகள் முழுவதும் பெரும் பகுதியை அவர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.

விவசாய அணி தலைவர் வெங்கடாசலம்

இதனால் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்புகளை அகற்றி மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என போராடி வரும் நிலையில், தங்கள் அரசியல் ஆள் பலத்தை பயன்படுத்தி நீர்நிலை பகுதிகளை தங்கள் பெயரில் பட்டா போட்டுக் கொண்டு வருகின்றனர்.

எனவே இந்த ஏரியின் நீர்பாசனத்தை நம்பியுள்ள 25-கிராமங்களின் நீர் ஆதாரத்தை கவனத்தில் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினார்.

இதையும் படிங்க: மஹாளய அமாவாசை... அக்னி தீர்த்த கடற்கரையில் குளிக்க தடை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.