ETV Bharat / state

மின்வாரிய அலுவலர்களின் அலட்சியத்தால் கம்பிகள் எரியும் அபாயம் : விவசாயிகள் வேதனை - வேதனையில் விவசாயிகள்

திருவாரூர் அருகே மின்வாரிய அலுவலர்களின் அலட்சியத்தால் மின் கம்பிகள் தீப்பற்றி எரியும் அபாயம் இருக்கிறது என அப்பகுதி விவசாயிகள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.

மின்வாரிய அலுவலர்களின் அலட்சியத்தால் கம்பிகள் எரியும் அபாயம் : விவசாயிகள் வேதனை

author img

By

Published : Apr 28, 2022, 10:34 PM IST

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சரிவர பாதுகாக்கப்படாததால் மின் கம்பிகள் விவசாய நிலங்களிலும் சாலையோரங்களிலும் தாழ்வாகச் செல்வதால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் வேதனைத் தெரிவித்துள்ளனர்.

இதில், குறிப்பாக நன்னிலம் அருகே உள்ள திருக்கொட்டாரம், பழையார், கமுதக்குடி, முகந்தனூர், மாத்தூர், பேரளம், கொல்லூமாங்குடி, குருங்குளம் உள்ளிட்டப் பல இடங்களில் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாகவும் மரங்களின் நடுவிலும் செல்வதால் எப்போது வேண்டுமானாலும் மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரியும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் அச்சத்திலுள்ளனர்.

மின்வாரிய அலுவலர்களின் அலட்சியத்தால் கம்பிகள் எரியும் அபாயம் : விவசாயிகள் வேதனை

மேலும், விவசாயப் பணிகளில் ஈடுபடும்போது உழவுப்பணியை மேற்கொள்ளும்போதும் அறுவடை நேரங்களிலும் இயந்திரங்கள் செல்வதற்கு மிகுந்த இடையூறாக இருப்பதாலும் வைக்கோல் ஏற்றிச்செல்லும்போது அவ்வப்போது தீப்பற்றி எரிந்து விடும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் இதுகுறித்து பலமுறை மின்வாரிய அலுவலர்களிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாகவும்; இதனால் தொடர்ந்து பல இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு வருகிறது எனவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் ஏற்பட்ட சம்பவம் போல உயிரிழப்பு திருவாரூர் மாவட்டத்தில் ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்து உடனடியாக புதிய மின் கம்பங்கள் அமைத்து மின் கம்பிகளை சரி செய்து கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 'பிணவறையில் நான் வைத்த முதல் மாலை 8ஆம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு'- அமைச்சர் அன்பில் மகேஷ் சட்டப்பேரவையில் உருக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.