திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இந்தப் பணிகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில், கோடை சாகுபடியாக பருத்தி சாகுபடியில் விவசாயிகள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.
'பருத்தி குவிண்டாலுக்கு சராசரியாக ரூ.6 ஆயிரம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்': விவசாயி கோரிக்கை இது குறித்து விவசாயி ஒருவர் கூறும்போது, 'தற்போது தமிழ்நாடு அரசு விவசாயப் பணிகளுக்கு விலக்கு அளித்துள்ளது. ஆனால், கரோனா நெருக்கடியில் பருத்தி பணிக்காக வேலை ஆட்கள் யாரும் வருவதில்லை. அதையும் மீறி கடன்களைப் பெற்று, ஆள்களை அழைத்து வந்து, பருத்தி நடவு செய்துள்ளோம். தற்போது, பருத்தி நல்ல முறையில் வளர்ந்துள்ளது. இந்நிலையில் பருத்தி கிலோ 24 முதல் 27 ரூபாய் வரை மட்டுமே விலை போவதாகத் தெரிகிறது. இது எங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. கடந்த ஆண்டுபோல் பருத்தி குவிண்டாலுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை இல்லாமல், குவிண்டாலுக்கு 6 ஆயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்து, அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
இதையும் படிங்க: விடைத்தாள் திருத்தும் பணி - ஜூலை மாதம் நடத்த கோரிக்கை