கரோனா வைரஸ் தொற்றை அகற்றும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தனது வீட்டில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மின் விளக்குகளை அணைத்து, தனது குடும்பத்தினருடன் தீபம் ஏற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்," நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் நிவாரண தொகை ஞாயிற்றுக்கிழமை வரை 79.4 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. விடுபட்டவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, ஏப்ரல் மாதம் இறுதி வரை ரேஷன் பொருட்கள், நிவாரணத் தொகை வழங்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க...நாடெங்கிலும் ஒற்றுமை தீப ஒளியை ஏற்றிய மக்கள்!