ETV Bharat / state

'நிலுவை பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க மோடி உத்தரவாதம்' - முதலமைச்சர் ஸ்டாலின் - thiruvarur latest news

ஒன்றிய அரசிடம் நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டுத் தொகையை விரைவில் வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி உத்தரவாதம் அளித்துள்ளார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்
author img

By

Published : Nov 13, 2021, 10:52 PM IST

Updated : Nov 13, 2021, 11:29 PM IST

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள இராயப்பநல்லூர், புழுதிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவ மழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின்னர் அவர் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சென்னை, டெல்டா மாவட்டங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள், களப் பணியாளர்கள், அலுவலர்கள் என அனைவரும் துரிதமாக செயல்பட்டு பாதிப்பை குறைத்திருக்கிறோம்.

செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

விரைவில் உரிய இழப்பீடு

விவசாயிகளுடைய கருத்துக்கள், கோரிக்கைகள் கேட்டு பெறப்பட்டிருக்கின்றன. அமைச்சர்கள் அனைவரும் ஆரம்பகட்ட ஆய்வினை முடித்துள்ளனர். இதுவரை நடப்பு சம்பா பருவத்தில் 17 லட்சத்து 40 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதில் 68 ஆயிரம் எக்டேர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

முடிந்த அளவு பயிர்களைக் காப்பாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. முடியாத நிலங்களில் மறு உழவு செய்ய உதவி செய்யப்படும். விரைவில் கிராம வாரியாக முழுமையான கணக்கெடுப்பு நடத்தி முடித்து உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆட்சிக்கு வந்தவுடன் டெல்டா மாவட்ட பிரச்சனைகளை புரிந்து கொண்டு ரூ. 65 கோடி மதிப்பீட்டில், 4 ஆயிரம் கி.மீட்டருக்கு தூர்வாரியதன் பயனாக வெள்ள பாதிப்பு குறைந்துள்ளது. தற்போது பெரு மழையினால் தேங்கியிருக்கும் நீரும் இதன் மூலம் விரைவில் வெளியேறும்.

உழவர்களை காக்கும் அரசு திமுக

இதேபோல கன்னியாகுமரியில் பாதிப்பு அதிகமாக இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, மேலும் இரண்டு அமைச்சர்கள் தற்போது அங்கு சென்றுள்ளனர். உழவர்களை எப்போதும் காக்கும் அரசு, திமுக அரசு. நடப்பு வடகிழக்கு பருவமழையின் காரணமாக 4 நாள்களில் மிக அதிக மழை பெய்திருக்கிறது.

இதனை எதிர்நோக்கி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்கிறது. டெல்டா மாவட்டங்களில் நீர் மேலாண்மை கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த தனி குழு அமைக்கப்பட்டு, நிரந்தர திட்டத்திற்கு வழிவகை செய்யப்படும்.

பிரதமர் மோடி உத்தரவாதம்

வருகின்ற 15ஆம் தேதியுடன் காப்பீட்டுக்கு விவசாயிகள் பிரீமியம் செலுத்தும் தேதி முடிவடையும். இதனை நீட்டிக்க கூறி ஒன்றிய அரசிடம் கேட்டிருக்கிறோம்.

மேலும் ஒன்றிய அரசிடம் நிலுவையில் உள்ள காப்பீட்டு தொகையையும் வழங்கக்கூறி, பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் கேட்டிருக்கிறேன். அவரும் விரைவில் வழங்குவதாக உத்தரவாதம் அளித்திருக்கிறார்” என்றார்.

நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு, அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பூண்டி. கலைவாணன், மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: உழவருக்கு உடனடி நிவாரணம் - ஸ்டாலின் உறுதி

Last Updated : Nov 13, 2021, 11:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.