ETV Bharat / state

அக்.20ஆம் தேதி 3ஆம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம் - மத்தியப்பல்கலைக்கழக துணைவேந்தர் - மத்திய பல்கலைகழகம்

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 20ஆம் தேதி முதல் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கும் என மத்தியப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

துணை வேந்தர் கிருஷ்ணன்
துணை வேந்தர் கிருஷ்ணன்
author img

By

Published : Oct 6, 2021, 7:59 PM IST

திருவாரூர்: நன்னிலம் அருகேவுள்ள நீலக்குடியில் செயல்பட்டுவரும் மத்திய பல்கலைக்கழகத்தில் இணையவழி மூலம் 6ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கிருஷ்ணன் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'அக்டோபர் 20ஆம் தேதி முதல் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது.

இந்த மத்தியப் பல்கலைக்கழகத்தில் இயங்கும் இளங்கலை, முதுகலை துறைகளிலுள்ள பாடத்திட்டங்கள் அனைத்தையும் தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமப்புற மாணவர்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டும்.

இந்த பல்கலைக்கழகத்தில் 2ஆயிரத்து 500 மாணவர்களில் அதிகபட்சமாக தமிழ்நாடு அல்லாத மாணவர்கள் தான் பயின்று வருகிறார்கள்.

தமிழ்நாட்டு மாணவர்கள் குறைந்த அளவிலேயே பயின்று வருவதால், இந்த மத்தியப் பல்கலைக்கழகம் குறித்த செய்திகளை வெளியில் தெரியப்படுத்த வேண்டும்.

பல்கலைக்கழகத்தை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

திருவாரூரைச் சுற்றியுள்ள மாணவர்கள் இந்த பல்கலைக்கழகத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போது தான் இந்தப் பல்கலைக்கழகம் ஆரம்பித்ததற்கான பலன் கிடைக்கும்.

செய்தியாளர்களைச் சந்தித்த துணைவேந்தர் கிருஷ்ணன்

இந்தப் பல்கலைக்கழகத்தில் இருக்கக்கூடிய கல்வியின் தரம் குறித்து கிராமப்புற மாணவர்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

கல்லூரிக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் சான்றிதழுடன் வர வேண்டும். இந்தப் பல்கலைக்கழகத்தை தரம் உயர்த்துவதற்காக எனது உயிரையும் கொடுப்பேன்' என்றார்.

இதையும் படிங்க: 7.5% இடஒதுக்கீடு - அரசு பொறியியல் கல்லூரிகளை தேர்வு செய்யாத மாணவர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.