திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே வாழ்க்கை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி (24). இவரது கணவர் முருகேசன்(40) இவர்களுக்கு ஸ்ரீசாந்த் என்ற ஐந்து வயது குழந்தையும், அர்ச்சனா என்ற மூன்று வயது குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ஜோதிக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனைத்தொடர்ந்து நேற்று கர்ப்பப்பை பிரச்னை காரணமாக ஸ்கேன் எடுக்க குழந்தையுடன் மருத்துவமனைக்கு வந்துள்ளார். யாரும் உடன் வராததால் குழந்தையை அருகில் இருந்த 40 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் கொடுத்து சென்றுள்ளார்.
பின்னர் வெளியே வந்து பார்த்தபோது குழந்தையையுடன் பெண்ணையும் காணவில்லை. மருத்துவமனை முழுவதும் தேடிப்பார்த்தும் குழந்தை கிடைக்காததால், திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:
லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு: திருவாரூர் முருகன் கொள்ளை கும்பலின் தலைவனா?