ETV Bharat / state

பள்ளியில் மயங்கி விழுந்து மாணவி உயிரிழப்பு... காரணம் என்ன? - school student faints and dies

Tiruvannamalai School student death: திருவண்ணாமலையில் 10 வகுப்பு பயிலும் மாணவி பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி பரிதாப பலி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2023, 2:24 PM IST

திருவண்ணாமலை: மங்கலம் அடுத்த ராந்தம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் அஞ்சலை (வயது 15). இவர் மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று (செப். 4) மாலை வகுப்பு அறையில் இருந்த அஞ்சலை திடீரென மயங்கி விழுந்து உள்ளார்.

இந்நிலையில், பள்ளி ஆசிரியர்கள் அவரை மீட்டு உடனடியாக மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர், அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து சென்று உள்ளனர்.

இதையும் படிங்க: வாங்கிய கடனுக்காக வீட்டை அபகரித்து துரத்தியதாக புகார் - ஆட்சியர் அலுவலகத்தின் முன் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி!

அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மாணவி அஞ்சலை இருதய பிரச்சினைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிக்கு சென்ற மாணவி திடீரென மயக்கம் போட்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: கன்னியாகுமரி கல்லூரி மாணவன் தற்கொலையில் திருப்பம்.. 'மார்பிங்' புகைப்படங்களை காட்டி ஆன்லைன் கடன் மோசடி கும்பல் மிரட்டியது அம்பலம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.