திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று வரை கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டாயிரத்து 622 ஆக இருந்தது. இன்று புதிதாக 98 பேருக்கு நோய் தொற்று உறுதியானதையடுத்து, மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டாயிரத்து 720 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஆறாயிரத்து 752 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றுவந்தவர்களில் சிகிச்சை பலனின்றி 122 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிழக்கு ஆரணி, நாவல்பாக்கம், ஜமுனாமரத்தூர், கலசப்பாக்கம், ஆக்கூர், வந்தவாசி, பெருங்கட்டூர், போளூர், காட்டாம்பூண்டி, தச்சூர், செங்கம், சேத்பட், துரிஞ்சாபுரம், திருவண்ணாமலை நகராட்சி உள்ளிட்ட சுகாதார வட்டத்தைச் சேர்ந்த 98 பேருக்கு இன்று நோய்தொற்று பாதிக்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து புறநோயாளிகள் பிரிவிலிருந்து அதிக எண்ணிக்கையில் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து வழக்கத்திற்கு மாறாக வெளி மாவட்டங்களில் இருந்து மாவட்டத்திற்கு வந்தவர்களில் 38 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.