திருவண்ணாமலை நகரின் சன்னதி தெருவில் உள்ள ஹெச்.டி.எஃப்.சி. வங்கியில் அரசின் உத்தரவை மீறி ஏசி பயன்படுத்துவதாக வட்டாட்சியருக்குத் தகவல் கிடைத்தது.
மேலும் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி உத்தரவின்பேரில் வங்கிக்கு வந்த வட்டாட்சியர் அமுலு வங்கி மேலாளரிடம்,
- அதிகம் கூட்டம் சேர்க்கக் கூடாது,
- வங்கியில் ஏசி பயன்படுத்தக் கூடாது,
- அரசின் உத்தரவைக் கடைப்பிடித்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
என்று அறிவுறுத்தியதோடு, அரசின் உத்தரவை மீறினால் வங்கிக்கு சீல்வைக்கப்படும் என எச்சரித்தார்.
இதையடுத்து, வங்கியில் ஏசி பயன்பாடு உடனடியாக நிறுத்தப்பட்டு, வாடிக்கையாளர்கள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க, வங்கி மேலாளர் அறிவுறுத்தினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 12 சிவப்பு மண்டல மாவட்டங்களில் திருவண்ணாமலையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.